உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது .
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது .
அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 4 லீக் போட்டிகள் வெற்றிகரமான நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று 5 வது லீக் போட்டி நடைபெற உள்ளது
விடுமுறை நாளான இன்று நடைபெறவுள்ள 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட உள்ளது . இந்த போட்டி உலக புகழ் பெற்ற சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த உலகலக்கோப்பை தொடரில் இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் விளையாடவுள்ளதால், தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டி குறித்து செய்தியாளர்களுடன் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது :
ஆஸ்திரேலிய வீரர்கள் ஐசிசி தொடர்களில் எப்படி விளையாடுவார்கள் என அனைவருக்கும் தெரியும். எங்களுடைய பலத்தில் கவனம் செலுத்துவோம். சென்னை மைதானம் சற்று சவால் மிகுந்தது.
கடந்த முறை ஆஸி.யிடம் இங்கு விளையாடியபோது தோல்வி அடைந்தோம். அந்த காரணங்களை அறிந்துள்ளோம்” உலகலக்கோப்பை தொடரில் எங்களது முதல் போட்டியான இன்று நிச்சயம் வெற்றி பெறுவோம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.