உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற – நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது .
அனல் பறக்க நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 6 லீக் போட்டிகள் வெற்றிகரமான நடைபெற்று முடிந்துள்ளது .
திங்கள் கிழமையான நேற்று நடைபெற்ற 6 வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்டியது . இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நியூசிலாந்து அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
சிறப்பாக பேட்டிங் அந்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. ஆரம்பம் முதல் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நெதர்லாந்து அணி இலக்கை எட்ட கடுமையாக போராடியது .
இருப்பினும் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களுக்கு 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன் மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு இது 2வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது .