ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி )நாதன் லம்பேர்ட். இவர் பிரஸ்டனின் வடக்கு மெல்போர்ன் தொகுதியில் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்ட தொடர் நடைபெற்றது. அதில் பேசிய நாதன் லம்பேர்ட் போது பெண் எம்பி ஆன நோவா எர்லிச்சிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என்று கூறினார்.
இந்த நிகழ்வை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கைதட்டி வரவேற்றனர்.
மேலும் அந்த கூட்டத்தில் பேசிய அவர், நான் இன்று திருமண மோதிரத்தைக் கொண்டு வரவில்லை என்றும், அந்த மோதிரத்தை இரவில் பரிசளிப்பேன் என்று கூறினார்.
இதனால் நாடாளுமன்றம் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் காணப்பட்டது. மேலும் பரபரப்பான பாராளுமன்ற கூட்ட தொடர் மத்தியில், புதிய விக்டோரியன் தொழிற்கட்சி எம்.பி. நாதன் லம்பேர்ட் தனது காதலை வெளிபடுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.