இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் (japan) , ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடு இம்மாதம் 24 ஆம் தேதி குவாட் அமைப்பின் உச்சி மாநாடு சிட்னி நகரில் இருந்து ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஜி 7 மாநாட்டிற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார்.ஹிரோஷிமாவில் மூன்று நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் இந்திய சார்பாக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்தியாவை சார்பாக நேருவுக்கு பிறகு ஹீரோஷிமாவுக்கு செல்லும் இரண்டாவது பிரதமர் ஆவார். ஹிரோஷிமாவில் ஜப்பான் அரசு மகாத்மா காந்திக்கு சிலை( Mahatma Gandhi Bust)அமைத்துள்ளது.
அதனை பிரதமர் நரேந்திர மோடி என்று திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.உடன் ஜப்பான் அதிகாரிகள் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும் பிரதமரின் வருகைகாக காத்திருந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினார். தற்பொழுது இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.