மறைந்த முதலமைச்சர் கலைஞரின் மருமகனும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்த முரசொலி செல்வம் (84) மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மருமகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கு மேல் முரசொலியில் பணியாற்றி இருக்கிறார்; முரசொலியில் சிலந்தி எனும் பகுதியை எழுதி வந்த வந்துள்ளார்.
Also Read : அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு..!!
முரசொலிக்கு கட்டுரை எழுதுவதற்காக குறிப்பு எடுத்து வைத்துவிட்டு கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் முரசொலி செல்வம் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 84 .
பெங்களூரில் இருந்து அவரது உடல் இன்று பிற்பகல் சென்னை கொண்டு வரப்படவுள்ள நிலையில் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.