Yellow fever : மஞ்சள் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளில் வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இடங்களில் வேக்சினேஷன் போட்டு கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் சிக்னல் மற்றும் கோட்டூர் பொன்னியம்மன் கோயில் தெருவில் திமுக சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (14.05.24) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,
தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளதன் நோக்கம் கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர், இளநீர், தர்பூசணி, கீர்ணி பழம் உள்ளிட்டவை மக்களுக்கு வழங்கப்படுவதற்கு தான்.
இதையும் படிங்க : என் கணவரை ஒருமுறையாவது நேரில் பார்க்கனும்.. கடைசி வரை நிறைவேறாத மனைவியின் ஆசை!
மஞ்சள் காய்ச்சல் (Yellow fever) பரவி வருவதால் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும், தென் அமெரிக்காவில் ஒரு சில நாடுகளுக்கும் செல்வதற்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி போட்டுகொண்டால் தான் விமான நிலையத்தில் குறிப்பிட்ட இந்த நாடுகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கும்.
அங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பும் போதும் இந்த தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு தான் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதற்காக கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் ஏற்கனவே இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு வந்தது.
அதேபோல தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மஞ்சள் வேக்சினேஷன் போடப்பட்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது.
ஆனால் இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் தனியார் மருத்துவமனையில் மஞ்சள் வேக்சினேஷன் போட்டவர்களை விமான நிலையங்களில் அனுமதிக்க மறுத்துவிட்டனர்..
கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டிருப்பது போல துறைமுகம் மருத்துவமனை வளாகத்திலும் அதே போல தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் இருக்கக்கூடிய அந்த மையத்திலும் மஞ்சள் வேக்சினேசன் போடப்படுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் இந்த வேக்சினேஷன் போடாமல் அரசு சார்பாக ஏற்படுத்தி இருக்க கூடிய இந்த இடங்களில் வேக்சினேஷன் போட்டு கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : #BREAKING | டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து!