வரும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று உத்திரபிரசேத மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா நகரில் நாரி சக்தி வந்தன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரூ.679 கோடி மதிப்பிலான 673 வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: #BREAKING | ஹரியானா முதலமைச்சர் ராஜினாமா!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்,”பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும்.
இதன்மூலம் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமையும். மோடி தலைமையிலான 3-வது ஆட்சிக் காலத்தில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வருமானமும் அதிகரித்து அனைவருடைய வாழ்க்கையும் செழிப்படையும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
தொடர்ந்து பேசிய அவர் ,2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க நாட்டு மக்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ,உத்திரபிரசேத அமைச்சர்கள் , அரசு நிர்வாகிகள், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.