மத்திய பாஜக அரசு புதிய ராணுவ ஆட்சேர்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் மற்றும் தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த போராட்டத்தின்போது செகந்திரபாத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் தீயாய் பரவியுள்ளது தகுதியான இந்த நிலையில் அக்னிவீரர்களுக்கு மகிந்திரா குழுமத்தில் வேலை வழங்கப்படும் என்று அந்த குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றி வரும் ஒழுக்கமும், திறமையும் கொண்ட வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தயாராக உள்ளதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார் .