Mallikarjun Kharge : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாவது..
“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது பொய்களை கூறி வருகிறீர்கள். வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவுகூர்வர்.
தைவான் பள்ளத்தாக்கில் 20 இந்தியர்கள் உயிர்த்தியாகம் செய்த போதும் சீனா என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் சீனாவை தப்பிக்க விட்டுள்ளனர்.
தற்போது உத்தரகாண்ட், லடாக், அருணாசல பிரதேசத்தில் சீன ராணுவத்தினர் தடவாளங்களை கட்டி வருகின்றனர். சீனப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது தான் அவர்கள் மீது மோடி எடுக்கும் நடவடிக்கையா?”. இது தான் உங்களது தேச பற்றா..?.
மக்கள்தொகை அடிப்படையில் ஓபிசி, எஸ்சி., எஸ்டிக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக எதிர்ப்பது ஏன்?. மேடைகளில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மோடி பேசி வருகிறார்.
1947 முதல் இட ஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான். வெயிலை விட உங்களது கொள்கைகள் தான் மக்களை சுட்டெரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார் Mallikarjun Kharge.
இதையும் படிங்க : வெப்ப அலை : இன்று 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!