நாய் மற்றும் பூனை கடிகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியமாக இருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் வசித்து வந்த பகவான் என்ற 27 வயது இளைஞர் சுமார் 2 மாதங்களுக்கு முன் ஒரு பூனை மற்றும் நாயிடம் கடி வாங்கியுள்ளார் . இதில் காயமடைந்த அவர் விலங்குகள் கடிக்கு சிகிச்சை எடுக்காமல் தனது அன்றாட வேலைகளை கவனித்து வந்துள்ளார் .
நாட்கள் நகர விலங்குகள் கடிக்கு போடக்கூடிய தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார் .
தலைவலி, உடல் வலி, தொண்டை வறட்சி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பகவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விலங்குகள் கடிக்கு முறையான சிகிச்சை எடுக்காம இருந்ததே அவரின் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளோ அல்லது வேறு ஏதும் விலங்குகளோ செல்லமாகவோ ஆக்ரோஷமாகவோ கடி வாங்கினால் அதற்கு கட்டாயம் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் இல்லையென்றால் ஏற்படும் பின்விளைவுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.