நாய்க்கும் ஆதரவாளருக்கும் ஒரே பிஸ்கெட்டா..?
காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது வளர்ப்பு நாய் ஒன்றுக்கு பிஸ்கெட் வழங்கி விட்டு, அதே பிஸ்கட்டை ஆதரவாளருக்கு கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில்,
நாய்க்கும் ஆதரவாளருக்கும் ஒரே பிஸ்கெட்டா..? என அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா, ராகுல் மீது புதிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார்.
இதையும் படிங்க : விஜய் அண்ணா கூட போட்டியா.. நான் என்ன லூசா? உதயநிதி!
ஜார்க்கண்ட்டில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி வளர்ப்பு நாய் ஒன்றுக்கு பிஸ்கட் கொடுக்கிறார். பிஸ்கட் கொடுப்பதற்காக அருகில் இருக்கும் உதவியாளரிடம் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை கேட்கிறார்.
பின்னர், அதனை நாய்க்கு ஊட்டுகிறார். அந்த சமயத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ராகுல் காந்தியுடன் பேச வருகின்றனர்.
நாய்க்கு பிஸ்கெட் ஊட்டிக் கொண்டே ராகுல் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நாய்க்கு ஊட்டிய பிஸ்கெட்டை நாய் சாப்பிட மறுக்க, அதை உடனடியாக தன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் ஆதரவாளரிடம் ராகுல் காந்தி கொடுக்கிறார்.
இது தொடர்பான வீடியோ இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் காங்கிரஸ் எம்.பி. கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை தவறாக நடத்துவதாக ராகுல் மீது பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனாலும், ஒரு சிலர் அந்த நாய் ராகுலிடம் பேசிய ஆதரவாளருடையது என்றும், நாய் அந்த சமயத்தில் பிஸ்கெட் சாப்பிட மறுத்ததால்,
அதனை சிறிது நேரம் கழித்து அந்த நாய்க்கு கொடுப்பதற்காக தான் மீண்டும் பிஸ்கெட்டை அந்த ஆதரவாளரிடம் ராகுல் காந்தி கொடுத்தார் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.