குக் வித் கோமாளி சீசன்5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில், டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
அந்தவகையில், கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குக்வித் கோமாளி நிகழ்ச்சி, மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் காமெடி கலந்த ஷோவாக இருப்பதால் இதற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இதனால், ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததுமே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும்.
ஆனால் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு “ஜோடி ஆர் யூ ரெடி” என்கிற டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் குக்வித் கோமாளி நிகழ்ச்சி இந்த ஆண்டு ஒளிபரப்பாகாது என்றெல்லாம் பேச்சுகள் எழத் தொடங்கின.
ஆனால் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கான (குக் வித் கோமாளி சீசன்5) ஆள் தேர்வு முழுவீச்சில் நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்க : வேங்கைவயல் விவகாரம் : வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்திடுக.. ராமதாஸ்!
அதன்படி நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பிக்பாஸ் சீசன் 7 பைனலிஸ்ட்டான விஷ்ணு விஜய்,
டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்ஷதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கம்போல் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு நடுவர்களாகவும், மணிமேகலை மற்றும் ரக்ஷன் இருவரும் தொகுப்பாளர்களாகவும் செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் மிக விரைவில் இந்நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.