விஜய் கட்சியை தொடங்கியதற்கு வாழ்த்துகள்.. விஜய்க்கு நான் அறிவுரை வழங்க முடியாது. அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
இந்தியா கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டே வருகிறது, இந்தியா கூட்டணி உறுதியான கூட்டணி இல்லை.
கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் காலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் குறித்து பொதுச் செயலாளர் சரத்குமார் பேட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கு முழு அதிகாரத்தை தந்துள்ளனர்…அதிகாரத்தை பயன்படுத்தி நல்ல முடிவை சீக்கிரம் எடுப்பேன்.
விஜய் கட்சியை தொடங்கியதற்கு வாழ்த்துகள்..விஜய்க்கு நான் அறிவுரை வழங்க முடியாது.அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.
பாராளுமன்ற தேர்தல் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு இல்லை, 2026 சட்டமன்ற தேர்தல் தான் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு.
திமுகவிலிருந்து கூட்டணி குறித்து எந்த அழைப்பும் வரவில்லை.
வெளிநாட்டில் இருந்த காரணத்தால் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முடியவில்லை.,விரைவில் மழை வெள்ள நிவாரணம் வழங்குவோம்.
விஜய் குறிப்பிட்ட அறிக்கையில் கூறியது போல தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்த ஆட்சி தான் உள்ளது, ஆனால் இந்தியாவில் மதத்தினை வைத்து அரசியல் இல்லை..
விலையில்லா மிதிவண்டி : கோவையில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் அமைச்சர் முத்துசாமி!
என்னுடைய உழைப்பு முதல்வர் ஆகவேண்டும் என்று எண்ணம் இல்லை. விரைவில் அமர வேண்டிய இடத்தில் அமர்வேன்.
சாதி,மத வேறுபாடின்றி கட்சியில் வாய்ப்பு வழங்குவேன்.
கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வெளிவரும்
மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சிறைக்கு சென்றதுதான் திமுகவின் செயல்பாடு.
சரத்குமார் செய்யும் சாதனைகளும், சேவைகளும் ஊடகங்களுக்கு தெரியாது, யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
அரசு யோசிக்கும் திட்டங்களை அரசுக்கு முன்னே நான் செய்துள்ளேன்.
மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட அதிகமாக உழைத்தவன் சரத்குமார்.
கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவரிடம் கேட்டிருந்தால் 25 தொகுதிகளை என்னிடம் கொடுத்து இருப்பார்.
சரத்குமார் உண்மையான மக்களின் தலைவர் என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
மோடியை புகழ்வதற்கு பல காரணங்கள் உள்ளது, வெளிநாடுகளில் மோடியின் செயல்பாடுகளால் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதற்கு காரணம் மோடி மட்டுமே.
சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
எல்லா இடங்களிலும் இந்தியாவின் பெயர் உயர்ந்த அதற்கு காரணம் பிரதமர் மோடி மட்டுமே.
வெளிநாடுகளில் இந்து கோயில்கள் கட்டுவது என்பது சாத்தியமற்ற ஒன்று ஆனால் அது தற்போது நடைபெறுகிறது. அதற்கு மோடிதான் காரணம்,
எல்லா இடங்களிலும் பிரச்சனை உள்ளது, எல்லாவற்றிற்கும் மோடியை குறை கூற முடியாது.
முந்தைய ஆண்டுகளை விட தற்போதைய ஆண்டில் தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது.
ஆளுனரோடு கலந்துகொண்டு ஒற்றுமையான முறையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்.
இந்தியா கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டே வருகிறது, இந்தியா கூட்டணி உறுதியான கூட்டணி இல்லை எனக் கூறியுள்ளார்.