தேசபக்தியில்லாத பாசிச இயக்கம் பா.ஜ.க பாசிச இயக்கம் பா.ஜ.க.. என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
1938-ல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரைசெய்தவர் காந்தியடிகள்.
அதேபோல, 1939-ல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டிசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசியராணுவத்தை அமைத்தார்.
இதையும் படிங்க : தொடரும் விஷ வாயு மரணங்கள்.. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – டிடிவி!!
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கியபோது,
சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும்போது,
‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்பதுன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன்.
இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை,
இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக்கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை ஆர்.என்.ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சாலை போட்டவன் கடவுளா பறந்து வந்தவன் கடவுளா? – Mugil | Ramar Temple
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ்சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது.
ஆனால், இரண்டாவது உலகப்போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலைஏற்பட்டபோது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள்.
150 ஆண்டு கால பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை வழியில் போராடித்தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத்தான் இந்தியா விடுதலை பெற்றது.
ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை வழிவந்த பாஜக கட்சியினர்.
சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு மறுத்த,
தேசபக்தியில்லாத பாசிச இயக்கம் பா.ஜ.க என்ற கறைபடிந்த வரலாறை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது.
இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.