பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா?
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று (பிப்ரவரி 17.01.24) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், 74 அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த பட்டாசு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த அறை முழுவதும் தீ பிடித்து இடிந்து விழுந்தது. அதோடு, தீப்பொறி மற்ற அறைகளுக்கும் வெடித்துச் சிதறியதால் அடுத்தடுத்த இருந்த 4 அறைகளிலும் வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதையும் படிங்க : Virudhunagar : பட்டாசு ஆலை விபத்து – 10 பேர் பலி!
இந்த விபத்தில், அந்த 4 கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும்,
உரிய நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டுமென அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது..
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்,
தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.
மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் உரிய நிவாரண தொகை உடனடியாக வழங்கும்படி,
இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதுடன், நான் ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியபடி தமிழ்நாடு முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என்பதை,
இந்த அரசு உடனடியாக ஆய்வு செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.