நாளை முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திரும்புதல் தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள் பொதுத்தேர்வு போல நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்த தேர்வும் நடத்தப்படவில்லை.
ஏற்கனவே ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த திருப்புதல் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த தேர்வுகள் பிப்ரவரி 9ம் தேதி தொடங்க உள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு தேர்வு துறை சார்பில் முதல் முறையாக திருப்புதல் தேர்வுகளுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.