தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு கோவில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ப்[ஆடும் சம்பவம் தொடர்கதையாகி உள்ள நிலையில் இதை மீட்டு எடுக்கும் முயற்சியில் மத்திய அரசும் , மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 10 ஐம்பொன் சிலைகளை தில்லை திருட்டு காவல் துறையினர் மீட்டு கும்பகோணம் சிறப்பு நிதி மன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து தஞ்சை புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவிலின் நடராஜர் சிலை, நெல்லை ஆழ்வார்குறிச்சி கோவிலின் கங்காள மூர்த்தி மற்றும் நந்திகேஸ்வரர் சிலைகள் உள்ளிட்ட 10 ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
மேலும் இந்த சிலைகளை வெளியுறவு துறைஅமைச்சகம் மூலம் தமிழக காவத்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் சிலைகளை பெற்று கொண்ட காவல் துறையினர் கும்பகோணம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.