குடும்பத்தலைவிகளுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் தருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விரைவில் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும், இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த திட்டத்தை எப்போது அறிவிப்பீர்கள் என தமிழக அரசிடம் கேட்கும் வகையில், மீம் கிரியேட்டர்கள் மீம்களை தயார் செய்து சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
குறிப்பாக ஷேர்சாட்டில் ”வரும் ஆனா வராது” என்ற ஹெஷ்டாக்கை பயன்படுத்தி பல்வேறு மீம்களை பரப்பி வருகின்றனர். இந்த மீம்களை பலரும் பார்த்து சிரித்தபடி பகிர்ந்து வருகின்றனர்.
அதில் ஒரு மீமில், இல்லத்தரசிகள் எப்போது 1000 ரூபாய் தருவீங்க? என்று திமுக அரசிடம் கேட்பதும், அதற்கு பிப்ரவரி 30…பிப்ரவரி 30.. பிப்ரவரி 30.. என்று அரசு பதில் சொல்வது போன்றும் தயார் செய்த மீம் குபீர் சிரிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இதுபோன்ற பல மீம்களை பார்த்து லைக் செய்து பலரும் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அம்மா: புள்ள ரேஷன் கடைக்கு போறான்.. அதற்கு தந்தை: அவன் 1000 ரூபாய ஆட்டைய போட போறான் டி” என்று சொல்லும் மீம், எதார்த்தமான குடும்ப நடைமுறையை நினைவுப்படுத்தி சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.