சீனாவை அச்சுறுத்தி வந்த HMPV வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 2 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
சீனாவை அச்சுறுத்தி வந்த HMPV வைரஸ் கர்நாடகாவில் உள்ள 3 மாத பெண் குழந்தைக்கும் 8 மாத ஆண் குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒருவருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; இது புதிய வைரஸ் அல்ல, ஏற்கனவே உள்ளதுதான் என்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
நோய் தொற்று உள்ளவர்கள் தும்மல், இருமலின்போது வாயை மூடிக்கொள்ள வேண்டும்; மக்கள் அச்சப்பட வேண்டாம், நெரிசல் மிகுந்த இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது.