மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 6)
மேஷம் :
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அவசியத் தேவை என்றாலும் கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
பிப்ரவரி 6 : அதிரடியாக குறைந்தது தங்கம் விலை!
மிதுனம் :
எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
கடகம் :
புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம் :
இன்று தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
கன்னி :
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
துலாம் :
உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை அவசியம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
தனுசு :
சமயோசிதமாக செயல்பட்டு எதையும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மகாலட்சுமியை வழிபாடு நன்மை தரும்.
மகரம் :
உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதாயம் கூடுதலாகக் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.
விநாயகரை வழிபாடு நன்மை தரும்.
கும்பம் :
எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே கருத்து வேறுபாடு நீங்கி அந்யோன்யம் அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
PMK யார் பக்கம்? அவர்களே வெல்வார்கள்! DMK & ADMK செய்ய வேண்டியது! – PERIYAR SARAVANAN பளீர்!
மீனம் :
இன்று தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.
காலபைரவர் வழிபாடு நன்மை தரும் (2024 February 6).