இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:
துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3000/- ஆகும். இவ்வரசின் தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் அறிவித்தவாறு துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வந்த பணியளார் இறந்துவிட்டால் அவரின் கணவன்/ மனைவிக்கு மாதந்தோறும் ரூ.1500/- குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500/-லிருந்து ரூ.2000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
“ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு இதுவரை பொங்கல் கொடை வழங்கப்பட்டதில்லை. தற்போது இவ்வரசின் தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் அறிவித்தவாறு துறைநிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியளார்களுக்குப் பொங்கல் கொடையாக ரூ.1000/- வழங்கப்படும்”.
- மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், இ.பி.எப். திட்டத்தின் கீழ் பயன் பெறாத திருக்கோயில் நிரந்தரப் பணியாளர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதிய திட்டம் 01.01.2006 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு. திருக்கோயில்களில் நிரந்தரமாக பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.750/- வழங்கப்பட்டது.
- இதற்கென நிதி வசதியுள்ள திருக்கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு ரூ.50 கோடி மைய நிதி உருவாக்கப்பட்டு அந்த நிதி முதலீட்டிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையைக் கொண்டு இந்த ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
- மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், இந்து சமய அறநிலையத் துறையின், துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ஓய்வு பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.750/-லிருந்து ரூ.800/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
மேலும் துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 01.01.1996 முதல் 31.12.2005 வரை ஓய்வு பெற்றுள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கும் ரூ.800/- மாத ஓய்வூதியம் வழங்கவும், இந்த ஓய்வூதிய உயர்வு / ஓய்வூதியம் அரசாணை வெளியிடப்படும் நாள் முதல் செயல்படுத்தவும் ஆணையிடப்பட்டது.
- மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 1996-க்கு முன்னர் ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.800/- வீதம் ஓய்வூதியம் வழங்க அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது.