ஹைதராபாத் நகரை சுற்றி வரும் 4 லட்சம் தெரு நாய்களின் வெறித்தனத்தால் மாதம் இருவர் ( Rabies disease ) ரேபிஸ் நோய்க்கு பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஹைதராபாத் மாநகரில் ஒரு நாளுக்கு 70 பேரை தெருநாய்கள் கடிப்பதாகவும், மாதம் சுமார் இருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி வருவதாகவும், அதில் 90,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பதாகவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read : லோக்சபா 2 ஆம் கட்ட தேர்தல் : 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு..!!!
கடந்த 2022-ல் 19,847 பேரும், 2023-ல் 26,349 பேரும் தெருநாய் கடித்து பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 9,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 மாதத்துக்குள் மட்டும் 8 பேர் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் 3,000 முதல் 4,000 ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
ஹைதராபாத்தில் மட்டும் கடந்த 2019 முதல் 5 ஆண்டுகளில் ரேபிஸ் நோய் ( Rabies disease ) ஏற்பட்டு 54 பேர் உயிரிழந்துள்ளனர் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். .