மதுரை மாவட்டம் வாகைக்குளம் மஞ்சமலைநகர் பகுதியை சேர்ந்த குமரசேன் என்ற 12வகுப்பு மாணவர் சிறு வயதில் இருந்தே நாட்டுப்புற கலைகள் மீதான ஆர்வத்தால் கட்டைக்கால் ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவருகிறார்.
இந்நிலையில் நாட்டுப்புறக்கலைகளை பாதுகாக்கும் வகையிலும், நாட்டின் 76வது சுதந்திர தினத்தினை போற்றும் வகையிலும் மதுரை பூதக்குடி பகுதியில் மாணவர் குமரேசன் இன்று கட்டைக்கால் ஆட்டம் ஆடியபடி உடலில் 76டியூப் லைட்டுகளை உடைத்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
ஏற்கனவே 3 உலக சாதனைகள் புரிந்த குமரேசன் தொடர்ச்சியாக 5 நிமிடத்தில் 76டியூப்லைட்டுகளை உடைத்த சாதனை நிகழ்வுகளை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி உற்சாகமூட்டினர்.
இதனை தொடர்ந்து உலக சாதனை படைத்தற்காக பீனிக்ஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
76 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இது போன்ற சாதனை முயற்சியில் ஈடுபட்டதாக மாணவரும், சாதனை புரிந்த்ய நாட்டுப்புற கலைஞருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் சாதனை புத்தக நிறுவனர் தெரிவித்தார்.