சென்னையில் அடுத்த மாதம் முதல் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னைக்கு வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற மற்றொரு புனைபெயரும் உண்டு. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து படிப்பதற்காகவும் , வேலை செய்வதற்காகவும் ஏராளமானோர் சென்னைக்கு வந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதன்படி மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் காணப்படும் சென்னையில் வசிக்கும் மக்கள் பேருந்துகளை தாண்டி அதிகளவில் ரயில் வலி பயணத்தை விரும்புகின்றனர்.
Also Read: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இளம் வீரர் குகேஷ்..!!
7 நிமிட இடைவெளியில் சலிக்காமல் நாள்தோறும் இந்த ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்த மாதம் முதல் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏசி பெட்டிகளில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும் செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி வரை செல்லும் 12 பெட்டிகள் கொண்ட ஏசி ரயில்கள் ஐசிஎப் தொழிற்சாலையில் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.