கடந்த 9ஆம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரம், பத்ரிநாத் கோயில், உத்தரகாண்ட் வியாசர் குகை, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று தியானம் செய்தார்.
அதையடுத்து, இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார்.
அதன் பின்னர், நேற்று ஆகஸ்ட் (18.08.23) உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை லக்னோவில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ரஜினிகாந்த்.
அதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அளித்த பதில்கள் என்னவென்று பார்க்கலாம்..
செய்தியாளர் : அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வீர்களா?
ரஜினிகாந்த் : ஆமாம். நாளை அங்கே செல்ல இருக்கிறேன்.
செய்தியாளர் : லக்னோவில் உங்களுடைய ரசிகர்கள் எல்லாரும் உங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளனர்.
ரஜினிகாந்த் : “ஆமாம்… ஆமாம்”.
செய்தியாளர் : உத்தரப் பிரதேச முதல்வரைச் சந்திக்கப் போகிறீர்களா? அவரிடம் என்ன கோரிக்கை வைக்கப் போகிறீர்கள்? உங்களுடைய படத்துக்கு Tax பற்றிப் பேசுவீர்களா?
ரஜினிகாந்த் : “இல்லை… இல்லை” வெறும் படத்தை மட்டும் பார்க்கச் சொல்லுவேன்.
செய்தியாளர் : உங்கள் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்திருக்கிறது.
ரஜினிகாந்த் : “நன்றி.. நன்றி” எனச் சிரித்தபடியே சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.