12-ம் வகுப்பு பொது தேர்வில் 600/600 எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லசை நடிகர் விஜய்(actor vijay )பரிசளித்தார்.
அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்து வந்த மாணவி நந்தினி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் வீதம் 600க்கு 600 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில் மாணவி நந்தினியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.மேலும், கவிஞர் வைரமுத்து நந்தினியின் வீட்டிற்கே சென்று தங்க பேனாவை பரிசளித்துப் பாராட்டினார்.
அதுமட்டுமில்லாமல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் நந்தினிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.அந்த வகையில்,நடிகர் விஜய்யும்(actor vijay) மாணவி நந்தினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று சென்னை நிலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய்(actor vijay) நேரில் அழைத்து ஊக்கத் தொகை வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் 600/600 எடுத்தஅரியலூர் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கி நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிதுள்ளார்.