பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் புகாரில் சிக்கிய சம்பவம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
தற்போது 7வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. மாயாவும் பூர்ணிமாவும் பிளான் பண்ணி பிரதிப்பை வெளியேற்றி விட்டதாக விசித்ரா குற்றம் சாட்டியுள்ளார். விசித்ரா கூறியதை கேட்டு கடுப்பான மாயா சக போட்டியாளர்களான பூர்ணிமா, ஜோவிகா, ஐஷு ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டு விசித்ராவுடன் சண்டையிட்டு வருகிறார்.
இவர்கள் கூட்டாக சேர்ந்து மொத்தமாக வந்தாலும் அவர்களை எல்லாம் சிங்கிளாக நின்று அசால்டாக எதிர்கொண்ட விசித்ரா மாயா பூர்ணிமா கும்பலை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். மேலும், விசித்ராவுக்கு ஆதரவாக அர்ச்சனாவும் களத்தில் இறங்கி உள்ளார்.
இதனால் செய்வதறியாது சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் மாயா. குறிப்பாக இன்று காலை விசித்ராவின் பல் துலக்கும் பிரஷ்சை கொடுக்காமல் ஒளித்து வைத்துக் கொண்டு பிரச்சனை செய்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசித்ரா அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார்.
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து பிக் பாஸ் வீடு கலவர பூமியாக உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அதிக சத்தத்துடன் பேசி வரும் மாயா பாலியல் புகாரில் சிக்கியவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு ஆடை என்ற படத்தில் நடித்த நடிகை அனன்யா என்பவர் மாயா மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அனன்யா மாயாவை கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தித்ததாகவும், அப்போது அவருக்கு 18 வயது என்றும் அந்த சமயத்தில் மாயா பல்வேறு ஆலோசனைகளை தனக்கு வழங்கி தன்னுடன் நெருங்கி பழகி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன் மீது அதிக கவனம் செலுத்தி தன்னிடம் மட்டும் தான் பழக வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டதாகவும் பிற நண்பர்கள் தன்னை வெறுக்கும்படி செய்ததாகவும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னை அடிக்கடி தவறான முறையில் கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்தி கொண்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ஆனால் இவை அனைத்தும் பொய் என மாயா தரப்பில் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.