பிரபல இளம் நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கரமனா தாலாவை சேர்ந்தவர் அபர்ணா நாயர். இவர் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அபர்ணா நாயர். சின்னத் திரையில் மட்டும் இன்றி, வெளித்திரையிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘மேகதீர்த்தா’ என்ற மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இவர் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து ‘கோடாடி சமக்ஷம் பாலன் வக்கீல்’, ‘கல்கி’, ‘அச்சாயன்ஸ்’, உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக மலையாளத்தில் ‘ஆத்மசகி’, ‘சந்தனம்’, ‘தேவஸ்பர்ஷம்’ போன்ற ஹிட் தொடர்களில் நடித்து உள்ளார். அதே போல் தமிழில் வெளியாகிய ‘ரன் பேபி ரன்’, ‘எதுவும் நடக்கும்’ போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
அபர்ணா நாயர் சஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அவருக்கு த்ராயா மற்றும் கிருத்திகா என்ற குழந்தைகள் உள்ளனர்.
சீரியல்களில் மிகவும் பிசியாக நடித்து வந்த அபர்ணா கேரளாவின் கரமனா தாலாவை உள்ள அவரது தாயாரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கிய தொங்கிய நிலையில் இருந்த அபர்ணாவை வீட்டில் இருந்த அவரது தாய் மற்றும் சகோதரி மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அபர்ணாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
இதனை அடுத்து அபர்ணாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இவரின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.