மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் மீது நடிகை நமீதா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நமீதா . திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து அரசியலில் முழு மூச்சி இறங்கி உள்ளார் .
குறிப்பிட்ட கட்சியின் சார்பில் தீவிர பிரச்சாரம் உள்ளிட்ட பல கட்சி பணிகளில் நடிகை நமீதா ஈடுபட்டு வரும் நிலையில் தான் செல்லும் இடங்களில் இருக்கும் பிரபல கோவில்களில் வழிபாடு செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் .
Also Read : தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல – அண்ணாமலை
அந்தவகையில் நடிகை நமீதா மதுரையில் உள்ள உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றுள்ளார் அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த தன்னை கோவில் நிர்வாகம் அவமரியாதை செய்ததாக நடிகை நமீதா குற்றச்சாட்டு வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நமீதா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் நானும் என் கணவரும் இதுவரை எத்தனையோ கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளும் ஆனால் இன்று மதுரையில் உள்ள உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது எங்களை கோவில் நிர்வாகி ஒருவரை தரம் தாழ்ந்து கேட்க கூடாத கேள்விகளை கேட்டுள்ளார்.
என்னையும் என் கணவரையும் பார்த்து நீங்கள் ஹிந்துவா எந்த சாதியை சேந்தவர்கள் உங்கள் மதம் மற்றும் சாதி சான்றிதழை காட்டுங்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நாங்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகையும் பாஜக பிரமுகருமான நமீதா தெரிவித்துள்ளார்.