சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை வனிதா நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் தன்னுடைய தந்தையை குறிப்பிட்டு பேசிய வார்த்தைகள் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் பல விவாதங்கள் நடைபெறுகிறது.
சர்ச்சைக்குரிய பிரபலமாகவும், நடிகையாகவும் அடிக்கடி இணையதளத்தில் பேசப்படும் ஒரு நபராக நடிகை வனிதா இருந்து வருகிறார். வனிதாவின் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை திறந்த புத்தகமாக தான் இருந்து வருகிறது.
இவரது வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பலருக்கும் தெரிந்திருந்தாலும், தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு தைரியமாக பதிலடி கொடுக்கும் ஒரு நடிகையாக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயலர் திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அதிகமான வரவேற்பைப் பெற்றது.
ஜெயலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை வனிதா தன்னுடைய மகளோடு ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி மிக ஸ்டைலாக இருந்தார் எனவும், படமும் ரொம்பவே அருமையாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும், நான் ரொம்ப அதிகமாக எதிர்பார்த்து வந்தேன். என் எதிர்பார்ப்பை ஜெயிலர் பூர்த்தி செய்து விட்டது. நெல்சன் இந்த படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறார். ரஜினிக்கு தாறுமாறாக பல காட்சிகள் இருந்தது. படம் முழுவதுமே நன்றாக இருந்தது. அதனால் நானும் ரசித்துப் பார்த்தேன் என்று கூறிய அவர், இந்த படத்தில் இருந்து என் வாழ்க்கையோடு ஒப்பிடும் ஒரு மெசேஜும் இருக்கிறது என்று கூறினார்.
அதாவது ஜெயிலர் படத்தில், “யார் செய்தாலும் தப்பு தப்பு தான்” என்று கூறப்படுகிறது. அது போல தான், என் வாழ்க்கையிலும் ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக “அப்பனாவே இருந்தாலும் தப்பு தப்பு தான்” என்று தன்னுடைய அப்பா விஜயகுமாரை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.