அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க கோரி ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களில் ஒருவரான மாதவரம் மூர்த்தி கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையடுத்து மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் ஒற்றை தலைமை கோரிக்கை முன் வைத்தனர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு ஒற்றை தலைமை கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்தில் நடந்ததை மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போட்டுடைத்தார். அதில் ஒற்றைத் தலைமை கோஷத்தை பெரும்பாலான மாவட்டச்செயலாளர்கள் முன்வைத்ததாகவும், இதுகுறித்து கட்சி பொதுக்குழுவில் கூடி தலைமை முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
இவர் பேசிய மறுகணமே தமிழக அரசியலில் காட்டுத் தீ போல பரவியது. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்து அதிமுக தொண்டர்களில் ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழு தீர்மானம் தயாரிக்கும் கூட்டத்தின் போது, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
அப்பொது மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் தரப்பினர் சிலரை தாக்கியதாக ரத்தக்களமாகவும் ராயப்பேட்டை தலைமை அலுவலகம் காட்சியளித்தது.
இந்த நிலையில், பொதுக்குழுவை ஒத்திவைக்கவேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர்.