விஷச் சாராய உயிரிழப்பு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக (admk) சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் விஷச் சாராயம் அருந்தி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் (admk) பேரணியாக சென்று ஆளுநர் ஆர்.என் ரவியிடம் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், விஷ சாராய விவகாரம், மின் கட்டணம், பால் விலை, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு விவகாரம் ஆகியவற்றை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று தமிழ்நாடு முழுவதும் காலை 10 மணி அளவில் இந்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சேலத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார்.
பொள்ளாச்சியில், எஸ் பி வேலுமணி கலந்து கொண்டுள்ளார். மேலும், மதுரையில் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டுள்ளார்.