மக்களே உஷார்.. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 561 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். அக்டோபர் மாதம் இறுதியிலோ அல்லது நவம்பர் மாதம மத்தியிலோ மூன்றாம் அலை உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்கள் வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே போல, இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100கோடியை கடந்துள்ள நிலையில் மக்களுக்கு 2ஆவது டோஸ் போடும் பணியை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில் கொரோனா மரணங்கள் திடீரென அதிகரிப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 200 முதல் 300 வரை பதிவாகி வந்த மரணங்கள் தற்போது 500-க்கு மேல் சென்றுள்ளது.

நேற்று 660 ஆக பதிவானது பேரதிர்ச்சி அளித்தது. இந்த இலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், புதிதாக 15,908 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் ஒரே நாளில் 561 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் 16,479 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 1,72,994 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கொரோனாவில் இருந்து குணடைவோர் விகிதம் 98.17%, உயிரிழப்போர் விகிதம் 1.33% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts