நடிகர் ரஜினிகாந்துக்கு மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை பெறும் நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு திரை உலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது போயஸ் கார்டன் வீட்டின் வாயிலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில் கே.பி(கே.பாலச்சந்தர்) சார் என்னுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. நான் விருது வாங்கிய பிறகு உங்களிடம் பேசுகிறேன்” என்றார்.