நாளை (20.08.23) மதுரையில் அ.தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு மாநாடு நடைபெறுகிறது.
மதுரையில் நாளை அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள எழுச்சிமிகு மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இந்த மாநாட்டிற்காக கடந்த ஒரு மாதமாக இதற்கான முன் ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக பணிகள் நடந்து வருகிறது. இந்த எழுச்சி மாநாட்டில் சுமார் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, நாளை நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பேருந்து, கார் பிறவற்றில் மதுரைக்கு பயணித்த வண்ணம் உள்ள நிலையில், சென்னை ராயபுரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேருந்துகள் மூலம் இன்று காலை மதுரைக்கு பயணத்தை தொடங்கினர்.
இந்த பயணத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.