நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க திட்டமிடபட்டுள்ளது. இந்த நிலையில் இரட்டை தலைமையால் உட்கட்சி நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிமுகவில் தொண்டர்களிடையே ஒற்றை தலைமை என்ற முழக்கம் மட்டும் எழுந்து வருகிறது.
ஓ.பன்னீர் செல்வம், ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதில் ஒற்றை தலைமையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார்.அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.