சென்னை விமான நிலையத்தில் ₹40 லட்சம் மதிப்புடைய அகில் மரக்கட்டைகள் மற்றும் அத்தர் பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து வந்த சென்னை விமான நிலையம் வந்தடைந்த விமானத்தில் இரு பயணிகள் சந்தேகத்திற்குரிய வகையில் அவரை நோட்டமிட்ட விமான நிலைய அதிகாரிகள் . சுங்கத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து அந்த பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது .
இந்த சோதனையில் சுமார் 20 கிலோ அகில் மரக்கட்டைகள், 15க்கும் மேற்பட்ட அத்தர் பாட்டில்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்திற்குள் தைரியமாக சுமார் 40 லட்சம் மதிப்புடைய அகில் மரக்கட்டைகள், அத்தர் பாட்டில்களை சூட்கேசுக்குள் மறைத்து கடத்தி வந்த இலங்கை பயணிகள் 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.