திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய வேண்டும். தொண்டர்கள் எப்போதுமே படிக்கட்டின் கீழ்ப்படியில் நிற்பார்கள். அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை அதிமுகவில் தற்போது இல்லை. இது அனைத்திற்கும் ஒரு முடிவு கீழ்ப்படியில் நின்று கொண்டிருக்கும் தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று பேசினார்.
இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பாஜக அலுவலக வாசலில் காத்திருந்தது தொடர்பான கேள்விக்கு திமுகவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் புரிந்து கொண்டது அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்துகிறார்கள்.
தொடர்ந்து பேசிய அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவு. இரட்டை இலை சின்னத்தை எந்த ஒரு காலத்திலும் நான் உயிருடன் இருக்கும் வரை எதுவும் செய்ய விட மாட்டேன் நான் ஒரு சிலரை எடை போட்டுக் கொண்டிருக்கிறேன். அதிமுகவை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி நாம் எதுவும் கூற முடியாது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
அதிமுக சிதருண்டு இருப்பதற்கு காரணம் பாஜக என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, நாம் அடுத்தவரை குறை கூற தேவையில்லை. நாம் சரியாக இருந்தால் போதும். என்னை ஏதாவது செய்ய முடியுமா. என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செய்யக்கூடிய நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளது.
ஆகவே ஒருவரை ஒருவர் திட்டுவதை விட்டுவிட்டு இருவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிடைய வேண்டும் என்பதுதான் எங்களது கட்சியின் தொண்டர்களின் வேண்டுகோள் என சசிகலா தெரிவித்தார்.
தேர்தல் சமயத்தில் ஸ்டாலின் மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை பெற்று பெட்டியை பூட்டி சாவியை வைத்துக்கொண்ட ஸ்டாலின் அந்த சாவியை தொலைத்து விட்டதாக சசிகலா தெரிவித்தார்.