விராட் கோலியின் Form குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் , விராட் கோலி ஆகியோர் மோசமான Formயில் உள்ளதால் அவர்கள் குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விராட் கோலிக்கு ஆதரவாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
Also Read : மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் – முழு விவரம் இதோ..!!
இதுகுறித்து பதிவிட்டுள்ள அம்பத்தி ராயுடு கூறியதாவது :
தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவையில்லை. 81 சர்வதேச சதங்களுக்கும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனிமேலும் அது நன்றாகவே இருக்கும். அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம்.
அவருக்கு சிறிது நேரம் தேவை. அவருக்குள் இருக்கும் நெருப்பு தானாகவே எரியும். அவருக்கும் கொஞ்சம் மரியாதை அளியுங்கள், அவரை நம்புங்கள். மிக முக்கியமாக அவரை தனியாக இருக்க விடுங்கள் என அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.