” சனாதன தர்மம் என்பது இனப்படுகொலையா?” உதயநிதியை ரவுண்டு கட்டிய அமித் மாளவியா!!

நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் நீதிமன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று அமித் மாளவியாவிற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில்சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும். அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என்று பேசியிருந்தார்.அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் தேசிய தகவல் மற்றும்தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மாளவியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக அரசில் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை மலேரியா மற்றும் டெங்குவுடன் இணைத்துள்ளார்… அதை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக்கூடாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80% மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்.

திமுக எதிர்க்கட்சித் தொகுதியின் முக்கிய உறுப்பினராகவும், காங்கிரஸின் நீண்டகால கூட்டாளியாகவும் உள்ளது. இதுதான் மும்பை சந்திப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதா? என்று கேள்வியெழுப்பியிருந்தார். ‘

இந்த ட்விட்டர் பதிவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு நான் ஒருபோதும் அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும்.

நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் உறுதியாக நிற்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன்.

சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் விரிவான எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.

எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன்: கொசுக்களால் கோவிட்-19, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல, பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன்.

நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் நீதிமன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Total
0
Shares
Related Posts