AmitShah’s visit canceled again : மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமீத்ஷா இன்று தமிழகம் வரவிருந்த நிலையில்,
ஒரு முறை தள்ளி வைக்கப்பட்ட அவரது பயணத்திட்டம் தற்போது தேதி குறிப்பிடாமல் இரண்டாவது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இம்மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரத்துக்கு 2 வாரங்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : தேர்தல் நடத்தை விதிகளை மீறும் திமுக – தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்!!
அந்த வகையில், கடந்த ஒரே மாதத்தில் மட்டுமே 2 முறை தமிழகம் வந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 9 ஆம்தேதி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார்.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா,
இன்று (04.04.2024) காலை தமிழகம் வருவதாகவும், இரவு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருபதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர், சில காரணங்களால் இன்று பகலில் தமிழகம் வர இருந்த அமீத்ஷாவின் பயணத்திட்டம் AmitShah’s visit canceled again தள்ளி வைக்கப்பட்டு,
இன்று இரவு விமானம் மூலம் மதுரை வந்து அதன் பின்னர் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பாஜக மற்றும் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் எனக் கூறப்பட்டது.
குறிப்பாக, தென் காசி, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் ரோடு ஷோ விலும் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அந்த பகுதி முழுவதுமே காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த நிலையில்தான், உள்துறை அமைச்சர் அமீத்ஷாவின் தமிழக தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக தரப்பில் கூறும் போது, பல்வேறு மாநிலங்களிலும் பிரதமர் மோடி, அமீத்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில்,
சில தவிர்க்க முடியாத காரணங்களால் அமீத்ஷாவின் தமிழக பயணத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டும் தமிழகம் வரவிருக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்தனர் அவர்கள்.
இதையும் படிங்க : பஞ்சரான வண்டிக்கு ஸ்டெப்னி போடுகிறார் உதயநிதி – அண்ணாமலை