2023ல் கர்நாடகாவில்(karnataka) சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது .இந்த நிலையில் 2023ல் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.மேலும் இரு பெரும் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று நாடு முழுவது ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல் பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக தேசிய கட்சி தலைவர் அமித்ஷா தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் சுற்று பயமா மேற்கொண்டு வருகிறார். கர்நாடகா(karnataka) சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தனித்து போட்டியிடும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ள சம்பவம் எதிர் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக(karnataka) மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜ 108 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக, பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளிடம் நேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘வரும் தேர்தலில் பாஜ, மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்தி பரப்புகின்றனர். நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது’’ என்றார்.இதை தொடர்ந்து வரும் தேர்தல்களில் பாஜக தனித்து போட்டியிடும் என்று தெரிவித்துள்ளது.