பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(annamalai) நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவரிடம் ரூ.1,5 கோடியும், மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.75 லட்சம் வாங்கியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்,
“பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் கொள்ளையடித்து வருகிறார். குறு சிறு தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார். அண்ணாமலை ஏன் பாதயாத்திரையைப் பாதியில் நிறுத்தி விட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறார்? ” கேள்வி எழுப்பியுள்ளார்.