சென்னை எழுப்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது .
இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் கடந்த 3 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய நிலையில் இத்தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது .
ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியா அணியுடன் மோதியது.

அனல் பறக்க நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தங்களது முழு பலத்தை காட்டி அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட இந்திய வீரர் ஜூக்ராஜ் சிங் முதல் கோல் போட்டு அசத்தினார் .
இதையடுத்து ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் மலேசிய வீரர் அஸ்ராய் அபுகமல் பதில் கோல் அடித்து சமனுக்கு கொண்டுவந்தார் . இதையடுத்து அடுத்தடுத்து 2 கோல்களை போட்ட மலேசிய அணி முன்னிலையில் இருந்தது .
இதையடுத்து மலேசிய அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறித்தனமாக ஆட்டிய இந்திய அணி சரியான நேரத்தில் 2 கோல்களை போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தது . இதையடுத்து இறுதி நேரத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் இந்திய அணி ஒரு கோல் போட 4 – 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது .

பரபரப்பான இறுதி கட்டத்தில் இரு அணிகளும் கோல் போட தொடர்ந்து முயற்சிக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது . இதையடுத்து இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கெத்தாக கைப்பற்றியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது 4-வது முறையாகும். ஏற்கனவே இந்தியா 2011, 2016, 2018-ம் ஆண்டுகளில் பட்டம் வென்று வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது .
இதையடுத்து ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு விளையாட்டு ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.