74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மற்றும் தலைக்கவசம் அணிதல்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக ராசிபுரத்தில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணியை மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிலையில் பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பேரணியானது கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து தொடங்கி பட்டணம் சாலை,ஆத்தூர் சாலை,சேலம் சாலை உள்ளிட்ட சாலைகளின் வழியாக 2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஸ்கேட்டிங்கில் பயணம் செய்து இறுதியாக அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றடைந்தனர்.
பேரணியில் தலைக்கவசம் அணிதல்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல்,ஆணுக்கு பெண் நிகர் என பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.