ராசிபுரம் அடுத்த கார்கூடல்பட்டி ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கும் நிகழ்ச்சியில் கண்டேன் காதலை பட பாணியில் 4 பைகளை திருப்பி திருப்பி வழங்கிய திமுகவினர் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22-ம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ம் தேதி துவக்கி வைத்தார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கார்கூடல்பட்டியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ்குமார்.,MP கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், வேளான்மை துறை சார்பில், மொத்தம் 55 பயனாளிகளுக்கு 2,52,830 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பைகளை விவசாயிகளுக்கு வழங்க அதனை அங்கிருந்து வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் இருந்து பிடிங்கி மீண்டும் எம்.பியிடம் ஒப்படைத்தார்.
அதனை மற்றோரு விவசாயிடம் வழங்கினார். அதனையும் பிடிங்கிய அதிகாரி மீண்டும் எம்.பியிடம் வழங்கினார்.இவ்வாறு 4 பைகளை மட்டுமே வைத்து கொண்டு திரும்ப திரும்ப விவசாயிகளிடமே வழங்கப்பட்ட செயல் கண்டேன் காதலை படத்தில் நடிகர் சந்தானம் ஒரு புடவை வைத்து வழங்கிய நகைச்சுவை காட்சிகளைப் போல திமுகவினர் செய்த செயல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது .