நடிகை விசித்ரா சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் காஸ்டிங் கோச் குறித்து கூறிய தகவல்கள் எல்லாமே பொய் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7-ல் கடந்த சில நாட்களுக்கு முன் ஹவுஸ் மேட்ஸ்ற்கு தங்களுடைய வாழ்கையில் நடந்த ஒரு பூகம்பத்தை பற்றி பகிர வேண்டும் என கொடுப்பட்ட ஒரு டாஸ்ன் போது பேசிய விசித்ரா, நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஷூட்க்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது ஒரு நாள் இரவில் அந்த படத்தின் ஹீரோ என்னை பார்த்து பெயரைகூட கேட்காமல், “இந்த படத்துல நீ நடிக்கிறயா. ரூமுக்கு வா” என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
ஆனால், நான் அங்கு செல்லாமல் அன்று இரவு எனது ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன். தினமும் மாலை 6 மணிக்கு மேல் ஆனால் குடித்துவிட்டு என் அறையை வந்து தட்டுவார்கள். அப்போது அந்த ஹோட்டல் மேனேஜர் ஆக இருந்த என் கணவர் தான் எனது நிலைமையை புரிந்து கொண்டு அந்த படத்தின் சூட்டிங் முடியும் வரை தினமும் ஒரு அறையை மாற்றி கொடுத்தார்கள்.
ஒரு நாள் படத்தின் ஷூட்டிங் அங்குள்ள ஒரு கிராமத்தில் நடந்த போது ஒரு காட்சியின் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் என்னை தகாத முறையில் தடவினார். உடனே அந்த நபரின் கையை பிடித்து நீ யார் என்று எனக்கு தெரியும் என்றது கூறி அவரை வெளியே இழுத்து கொண்டு நேராக ஸ்டாண்ட் மாஸ்டரிடம் போய் கூறிய போது அவர் என்னை கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார். அங்கிருந்த ஒருவரும் எனக்கு ஆதரவு கொடுத்து குரல் எழுப்பாததனால், மனமுடைந்து ஆதங்கத்துடனும், அழுகையுடனும் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
அதின் பிறகு இந்த சம்பவம் பற்றி நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்ததற்கு இதெல்லாம் சகஜம் தான். வேறு வேலையை பாருமா, இதற்கெல்லாம் சங்கத்திற்கு வராதீங்க, போய் போலீஸ்ல புகார் கொடுங்க என வெளிப்படையாகவே சொன்னாங்க.
இதனால், தான் இப்படிப்பட்ட சினிமா துறையே வேண்டாம் என நினைத்து அன்றுமுதல் சினிமாவை விட்டே விலகிவிட்டேன் என கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை விசித்ரா கூறிய தகவல்கள் எல்லாமே பொய், இது ஒரு திட்டமிடப்பட்ட பிளான் என்று பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் பேசியுள்ள பயில்வான், மன்சூர் அலிகான் சர்ச்சை பெரிய அளவில் வைரலானது போல கன்டென்டுக்காக விசித்ரா குறித்த சர்ச்சையை பிளான் பண்ணி செய்திருக்கிறார்கள், பிக் பாஸ் டீம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சில கேள்விகள் எழுகிறது. மலம்புழா எங்கு இருக்கிறது? கேரளாவில்.. கேரளா யாருடைய தேசம்? விசித்ராவினுடைய சொந்த மாநிலம். அவங்க ஒரு மலையாளி.
அந்த லாட்ஜில் மேனேஜராக வேலை பார்த்தவர் அவருடைய கணவர். இப்படி இருக்கும் பொழுது.. நான் ஒவ்வொரு அறையாக மாறி மாறி தங்கினேன் என்று விசித்திரா கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. அப்போதே இது குறித்து பேசாமல் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகு இப்போது வந்து இதை கூறுவதற்கு என்ன காரணம்? பிக் பாஸ் டிஆர்பி ரேட்டிங்கில் கீழே இறங்கிவிட்டது. அதை ஸ்டாண்ட் பண்ணுவதற்காக இப்படி ஒரு பரபரப்பான கண்டன்ட்டை கொடுத்து சதி திட்டம் தீட்டி உள்ளார்கள் விஜய் டிவியும், பிக் பாஸ் டீமும்.
சரி இது எல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அந்த ஹீரோ யார் என்று பெயரை சொல்ல வேண்டியது தானே? பெயரையே சொல்ல முடியவில்லை என்றால் இந்த பிரச்சனையை மட்டும் எதற்காக சொல்ல வேண்டும்? அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டரையும் குறை சொல்லி இருக்கிறார். ஆனால், இதற்கு முன்பாக இப்படி ஒரு பிரச்சனை நேரிடும் சமயத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தான் உதவி செய்வார்கள் என்றும் விசித்ராவே கூறி இருக்கிறார். ஏன் இப்படி முரண்பாடாக பேசுகிறீர்கள் விசித்ரா?
அப்படியென்றால் உங்களுடைய சொந்த மாநிலத்திலேயே உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுங்கள். அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை சொல்வதற்கு ஏன் வெட்கப்படுகிறீர்கள்? யாரால் பாதிக்கப்பட்டோம் என்பதை வெளிப்படையாக கூறினால் நம் மக்கள் எதற்காக அது எந்த படம்? அந்த ஹீரோ யார்? போன்றவற்றை தேடி தேடி ஆராய போகிறார்கள். தவறு செய்தது யாராக இருந்தால் என்ன? மானம் பெரிதா? உயிர் பெரியதா?
விசித்ரா பிக் பாஸ் வீட்டில் விளையாடாமல் தத்தி மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரால் விளையாடவும் முடியாது. அதனால் தான் இந்த பாலியல் புகார் கன்டென்ட் கொடுத்துள்ளார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.. முதல் நாள் கதவு தட்டிய அன்று ஷூட்டிங் வேண்டாம் என்று வீட்டிற்கு போய் இருக்க வேண்டியது தானே? ஆகமொத்தத்தில் அவர் கூறிய எல்லாமே பொய்.. பிக் பாஸின் திட்டமிடப்பட்ட பிளான் என கூறியுள்ளார் பயில்வான்.