டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணிக்கான ( indian jersey ) புத்தம் புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.
4 பிரிவுகளாக இந்த அணிகள் பிரிக்கப்பட்டு . ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா சார்பில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார் என்று பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட போகும் இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டது .
அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி, யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், மொகமது சிராஜ் ஆகியோர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் குறித்து பலருக்கும் எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் ( indian jersey ) இந்திய அணிக்கான புத்தம் புதிய ஜெர்சியை பிசிசிஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது.