நடிகர் கமல்ஹாசன் தமிழில் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 போட்டியாளர்களின் போட்டோக்கள் என ஒரு போட்டோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
அதில் சூப்பர் சிங்கர் பாடகர் சாம் விஷால், சீரியல் நடிகை பாவனி ரெட்டி, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ஷகீலாவின் மகள் மிலா
மற்றும் நடிகர் கோபிநாத் ரவி, குக் வித் கோமாளி சுனிதா, மலேசிய மாடல் நதியா சங், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் டிக்டாக் பிரபலமும் நடிகையுமான காயத்ரி ஷான், பிரபல சீரியல் நடிகர் அஸீம் கான், மைனா படத்தில் நடித்துள்ள நடிகை சூசன், நடிகர் இமான் அண்ணாச்சி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்து.
இதேபோல் நடிகை பிரதனி ஷர்வா, டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து, நடிகை பிரியா ராமன், சன் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர் ஆகியோரின் படங்களும் பிக்பாஸ் சிஜி போட்டோவில் இடம் பெற்றுள்ளது. இந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் இந்த புகைப்படங்கள் எந்தளவுக்கு உண்மையானது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்