சென்னை மதுரவாயல் அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட விரக்தியில் தனது காரை தானே கல்லை போட்டு உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக ரூ.110 ஐ கடந்து விற்பனை செய்யப்ப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளன. இந்த நிலையில், கடந்த மே 21 ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50 குறைத்தும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7 குறைத்தும் அறிக்கை வெளியிட்டது.
ஆனால் இந்த விலை குறைப்புக்கு எதிர்வரும் குஜராத் தேர்தல் காரணம் என விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இருந்தபோதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுராவயலை சேர்ந்த காமராஜ் என்பவர் பாஜக ஊடக பிரிவு நிர்வாகியாகவும், சின்னத்திரை நடிகராகவும் இருந்துவருகிறார். இவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு பாதிப்பால், விரக்தியில் தனது காரை தானே கல்லை போட்டு உடைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனது கார் 15 கி.மீ தான் மைலேஜ் கொடுக்கும். ஆனால் தற்போது பெட்ரோல் விற்கும் விலைக்கு எங்களால் எப்படி பெட்ரோல் போட்டு வாகனத்தை இயக்க முடியும், எப்படி சார் நாங்க வாழுறது? என வேதனை தெரிவித்தார். பாஜக நிர்வாகியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.